டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.
இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.
I தவணை | கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன் | 2000/- |
பயன் | ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் மூன்றாம் மாத நிலையில் | 2000/- |
II தவணை | நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்பகால மற்றும் இரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்திருந்தால். | 2000/- |
பயன் | இரண்டாம் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் | 2000/- |
III தவணை | அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன் | 4000/- |
IV தவணை | குழந்தைகளுக்கு 3-ஆம் தவணை OPV/ROTA/PENTA VALENT தடுப்பூசிகள் போட்ட பிறகு | 4000/- |
V தவணை | குழந்தைகளுக்கு 9 மாதம் (270 நாட்கள் முடிந்து) தடுப்பூசி போட்ட பிறகு | 2000/- |
மொத்தம் | 18000/- |
கர்ப்பிணி தாய்க்கான ஊட்டச்சத்து மாவு | 1 கி.கி. |
இரும்புச் சத்து திரவம் 200 மி.லி. | 3 |
உலர் பேரிச்சம் | 1 கி.கி. |
புரதசத்து பிஸ்கட் | 500 கிராம் |
ஆவின் நெய் | 500 கிராம் |
அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை | 3 |
துண்டு | 1 |
கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற்று இருக்க வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம நகர சுகாதார செவிலியர்கள்
ஏழை கர்ப்பிணி தாய்மார்கள்
ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவி
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More