தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் தொகுதி 1, 2 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத்தேர்வான கட்டாய தமிழ்மொழித்தாள் தகுதி தேர்வில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விலக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும்.
40 சதவிகிதத்துக்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பொருந்தும்.
இவ்விலக்கினைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More