சென்னை: தொழில்துறை சார்பில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, ரூ.10,062 கோடி முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ரூ.5,512 கோடி முதலீட்டில் 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டங்களுக்கு இன்று (23.10.2020) காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினேன்.
இதேபோல் தொழில்துறை சார்பில் திருவள்ளூர் – தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Wheels India நிறுவனத்தின் வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தேன்.
இதன்மூலம் 1,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.
1100 பேருக்கு வேலை
திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில் இன்று (23.10.2020) ரூ.1000 கோடி முதலீட்டில் இன்டக்ரேட்டு சென்னை பிசினஸ் பார்க் ( Integrated Chennai Business Park (DP World) ) நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பார்க் (Logistics Park) திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினேன். இதன்மூலம் சுமார் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
சல்காம்ப் நிறுவனம்
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த Salcomp நிறுவனத்தின் கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தேன்.
அதானி தொழில் நிறுவனம்
இதேபோல் தொழில்துறை சார்பில் திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Adani Gas நிறுவனத்தின் City Gas Distribution திட்டத்திற்கு இன்று (23.10.2020) அடிக்கல் நாட்டினேன்.
தூத்துக்குடி தொழிற்சாலை
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ரூ.150 கோடி முதலீட்டில் Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைப்பதற்கான புதிய திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினேன். தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில் ரூ.250 கோடி முதலீட்டில் 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் (Shreevari Energy Systems) நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினேன்.
தேர்வாய்கண்டிகை
கோயம்புத்தூர் மாவட்டம் கள்ளப்பாளையத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினேன். திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.இதன் மூலம் சுமார் 300 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்” இவ்வாறு கூறியுள்ளார்.
PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் Read More
Bengaluru: In a country where loans have become the default path to own anything big—especially… Read More
Let Me Be Honest With You RRB NTPC Apply – 2025 | RRB NTPC Apply… Read More
TNCSC Thoothukudi has released the recruitment notification No: E1/07156/2021 Date: 11.07.2025 to fill the 300… Read More