தமிழக அரசின் மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| நிறுவனம் | தமிழக அரசின் மீன்வளத்துறை |
| வேலையின் பெயர் | சாகர் மித்ரா(Sagar Mitra) |
| காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 600 காலிப்பணி இடங்கள் |
| வயது விவரம் | 35-க்குள் இருக்க வேண்டும். |
| தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். |
| கல்வித்தகுதி | மீன்வளத்துறையில் மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
| சம்பள விவரம் | மாதம் ரூ.10,000 + 5,000 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.01.2022 |
| விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
| இணையதள முகவரி |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
இந்த லிங்கில் சென்று காணவும்.
தமிழக மீன்வளத்துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
https://www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More