தமிழகத்தில் கொரனோ வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 24ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு 13 வகையான மளிகைப் பொருட்களை வழங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோதுமை, ரவை உள்ளிட்ட 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் என்னென்ன பொருட்கள் எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்பிடி தடைக்காலம்
கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ம் நாள் அன்று தொடங்கி ஜூன் 14-ம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ம் நாளன்று தொடங்கி ஜூலை 31-ம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தடைக்கால நிவாரணம்
மீன்பிடி தடைக்காலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகளில், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீன்வர்கள் தங்கள் குடும்பத்தினை சிரமமின்றி நடத்தி செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
ரூ.5,000 நிவாரணம்
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி நடப்பாண்டிற்கு(2021-ம் ஆண்டு) 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவராணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்புதல் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம்.,
வங்கி கணக்கில் செலுத்தப்படும்
திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி(பகுதி) ஆகியவற்றை சேர்ந்த 25,402 பயனாளிகளும், மேற்கு கடற்கரை மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1,72,000 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More