Advertisement

தமிழக அரசு புதிய அறிவிப்பு இலவச ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் அதன் தொடர்ச்சியாக மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 24 4 2020 மற்றும் 25 4 2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் டோக்கன் வழங்கப்படும் தேதியை மாற்றம் செய்தும் இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் தேதி குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது முன்பே 13 4 2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலையில்லா வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 24 -05-2020 மற்றும் 25 4 2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்க கூடிய தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது அதற்கு மாற்றாக வரும் 02 -05 -2020 மற்றும் 03-05-2020 ஆகிய நாட்களில் டோக்கன்கள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாள் மற்றும் நேரத்தில் தமது நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் நான்காம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு உரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago