கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானங்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது பல மாநில அரசுகளும் ஊடகங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் உள்ளது இதன் காரணமாகவும் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால மீனவர்களுக்கு நிவாரணமாக தலா 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதேபோல நல வாரிய உறுப்பினர்களுக்கு உள்ள மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரணம் வங்கியில் செலுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு ஜூன் முதல் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால இதிலுள்ள மீனவர்களுக்கு நிவாரணமாக 1000 ரூபாயும் வழங்குவதற்கு ரூபாய் 83.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TNPSC Group 4 Result update Read More
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More
PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் Read More