Advertisement

தமிழக அரசு மீண்டும் ரூ.1000 நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. இதோ லிஸ்ட்

விவசாய கூலி தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள என விழிப்பு நிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

விலையில்லா பொருட்கள்

இதையடுத்து தமிழக அரசு அரிசி அட்டை தார்கள் அனைவருக்கும் ரூ.1000 நிவாரணம் அளித்து உதவியது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைம் விலை இல்லாமல் அளித்தது. தொடர்ந்து மே மாதத்திற்கு உணவு பொருட்களை விலைஇல்லாமல் அளித்தது. தற்போது ஜுன் மாதத்திற்கும் விலை இல்லாமல் உணவு பொருட்களை விநியோக்க முடிவு செய்துள்ளது.

ரேஷன் அடைக்கு

இந்நிலையில் ரேஷன் அட்டை தார்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் நலவாரியத்ததில் பதிவு செய்தவர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள், வணிகர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், நறிகுறவர்கள், பூசாரிகள், காதி தொழிலாளர்கள், திருநங்கைகள், சலவை தொழிலாளர்கள், உள்பட பல்வேறு 14 வகையான தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் அறிவித்து வழங்கியது.

தமிழக அரசு நிவாரணம்

சென்னை: பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர், நாவிதர், பண்டாரம், காதுகுத்துபவர்கள், குயவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்,

ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2010 அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி வரும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8340 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும் திருக்கோயில்களில் ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியம் நாவிதர், பண்டாரம்/ பண்டாரி, மாலைக்ட்டி, பரிச்சாரகர்/ சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர்/ ஆசாரி, நாமவளி, மிராசு கணக்கு, கங்காணி திருவிளக்கு, முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே சிறப்பு நேர்வாக ரூ.1000 ரொக்க மீண்டும் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago