தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, Indian Rupee symbol.svg 1,00,000 (ஒரு இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.
வரலாறு
ஜூலை 23, 2009 அன்று இந்திய மத்திய சுகாதரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கலைஞர் மருத்துவக் காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதே போன்ற திட்டம் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஆரோக்கியஸ்ரீ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கான தவணைத் (பிரிமியம்) தொகையை பயனாளிகளே கட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தில் அத்தொகையை மாநில அரசே கட்டியது. இதே போன்று தமிழக மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான தவணைத் தொகையாக மாதம் ரூ.20 அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எனும் பெயரில் ஸ்டார் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஜூலை 2011ல் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.
பயனாளிகள்
பயன்பெறும் தொகை
தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ. ஒரு இலட்சம் முதல் ரூ. 1.5 இலட்சம் வரை நான்காண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் நான்கு லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகள், குறிப்பிட்டுள்ள நோய் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும், அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள்.
இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை
புற்று நோய் மருத்துவம்
சிறுநீரக நோய்கள்
புரோஸ்டேட் சுரப்பி நோய்களுக்கான அறுவை சிகிச்சை
கண் நோய் சிகிச்சை
இரத்தக் குழாய்களுக்கான அறுவை சிகிச்சை
கருப்பை நோய்கள்
புற்று நோய் பொருட்டு கருப்பை, சினைப்பைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்
நெஞ்சக நோய்கள்
நுரையீரல் சீழ் கட்டி நெஞ்சு உறைக்குள் நீர் கோர்த்தல் மற்றும் நெஞ்சு உறைக்குள் காற்று சேருதல் ஆகியவற்றுக்கான சிகிச்சை
இரத்த நோய்கள்
தாலிசீமியா மற்றும் சிக்கிள் செல் இரத்த சோகை நோய்க்கான மருத்துவம்
இதர பிற நோய்கள்
மருத்துவப் பரிசோதனையின் பொழுது மேற்குறிப்பிட்ட நோய்கள் தவிர மற்ற நோய்கள் தவிர மற்ற நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு ஏற்படும் செலவுகள்
சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள்
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள சிகிச்சைகள் தவிர்த்து வேறு சிகிச்சைகளுக்கான செலவுகள்
தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய யுனைடெட் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.
பதிவு செய்தல்
காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள சிறப்பு அட்டையைக் காண்பித்தால் மட்டுமே பயனடைய முடியும்.
இந்த சிறப்பு அட்டை வழங்கும் வரை;
குடும்பத் தலைவராயின் நலவாரிய உறுப்பினர் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்பத் தலைவர் தவிர்த்த மற்ற உறுப்பினர்களாயின், நலவாரிய உறுப்பினர் அட்டையுடன் கிராம, நகர பஞ்சாயத்துகளாயின் கிராம நிர்வாக அதிகாரி/ நகராட்சி/மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வரிவசூலிப்பாளரிடமிருந்து பெறப்படும் புகைப்பட அடையாளச் சான்றிதழ்
(அல்லது)
அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏனைய அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்த ஒரு நலவாரிய உறுப்பினராக அல்லாத, இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியாக ஏனைய அனைவரும் குடும்ப அட்டையின் நகல்
(மற்றும்)
(1) கிராம நிர்வாக அதிகாரி / வரி வசூலிப்பவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் குடும்ப வருமானச் சான்றிதழ் மற்றும் கிராம / நகர பஞ்சாயத்துக்களாயின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலராலும், நகராட்சி / மாநகாராட்சிகளில் வரி வசூல் அலுவலராலும் பயனாளியின் புகைப்படத்துடன் கூடிய சான்றும் சமர்ப்பிக்க வேண்டும். (2) அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏதாவதொரு அடையாள அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். (3) முதல்முறையாக சிகிச்சை மேற்கொள்ளும் போது மட்டுமே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் சான்றிதழ் அல்லது மேற்குறிப்பிட்ட வேறு சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய இயலும். அடுத்து வரும் மருத்துவ சிகிச்சைகளின் போது, பயனீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உரிய அடையாள சிறப்பு அட்டையைப் பெற்று மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய முடியும்.
அனுமதிக்குத் தேவையான மருத்துவ ஆவணம்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அல்லது பொதுநல மருத்துவர்களால் உரிய படிவத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைச் சீட்டு எனினும் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அளித்த பரிந்துரைச் சீட்டு மற்றும் அடையாள அட்டை இல்லாமல் அனுமதிக்கப்படலாம். ஆனால் இரண்டு நாட்களுக்குள் தக்க அத்தாட்சியைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்பு அதிகாரி/ செயல் அலுவலகம்
பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனையிலும் இத்திட்டச் செயல்பாட்டிற்கான ஒரு செயல் அலுவலகம் அந்தந்த மருத்துவமனைகளால் செயல்படுத்தப்படும். இந்த செயல் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் ஸ்டார் காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரி பயனீட்டாளர்களுக்குச் செய்து கொடுப்பார்.
இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் என்ற இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகின்றது.
பயனாளிகள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்குச் சென்று, காப்பீட்டு நிறுவனத்தினிடமிருந்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அந்த அடையாள அட்டையைக் காண்பித்து ஏழைக் குடும்பங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அல்லது குறிப்பிட்டத் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தவணைத்(பிரிமியம்) தொகையாக ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கியது.
Website Link : முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More