பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மார்ச்/ஏப்ரல் 2023ல் நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள நிலையில் அவர்களின் நலன் கருதியும், பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயார் டுசய்வதற்கு ஏதுவாகவும், அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் கருதியும் பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை (எண்ணும் எழுத்தும் என்ற திட்டம்) வெற்றிகரமாக செயல்படுத்த இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது.
1. தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4939 கடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜிலை-2022 முதல் பிப்ரவரி-2023 முடிய 8 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர், உயர்/மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி /முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அவ்வாறு தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
2. பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அவ்வாறே முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
13000 teacher smc | Link |
---|---|
Download details notification pdf | click here |
Official website | click here |
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More
பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More
The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More
தமிழ்நாட்டில் டிராக்டர் வாங்குவதற்கான மானியம் பெற, விவசாயிகள் தமிழ்நாடு அரசின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில்,… Read More