பத்திரிக்கை செய்தி (தினகரன்): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில உள்ளது. அனால், போதிய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காலியாகவுள்ள 2715 சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-2 (மருத்துவ பணியாளர்கள்) பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அனைத்து மண்டல துணை இயக்குனர்களுக்கு ஏழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பாவது:
கொரோனா தடுப்பு பணிகளை வேகக்கப்படுத்தும் வகையில் பொதுசுகாதாரத்துறை சார்பில் 2715 சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்கள் (ஆண்கள்) தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி இந்த பணியிடங்கள் காலியாக உள்ள செங்கல்பட்டு 73, காஞ்சிபுரம் 48, திருவள்ளூர் 80, திருப்பத்தூர் 61, வேலூர் 62, கடலூர் 74, சேலம் 98, மதுரை 79, ஈரோடு-83, கோவை-93, திருப்பூர் 73, விழுப்புர-69, கிருஷ்ணகிரி-50, நெல்லை-63, தூத்துக்குடி-53, கோவில்பட்டி-29, அரியலூர்-39, பெரம்பலூர்-23, கரூர்-43, தஞ்சாவூர்-59, திருச்சி-53 என மொத்தம் 2715 பேர் 3 மாதம் தற்காலிக பணி அமர்த்தப்படுகின்றனர்.
இதற்கு, பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல், உயிரியல் பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழ் வழியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் (ஆண்கள்) / சுகாதார ஆய்வாளர் பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்து இருக்க வேண்டும். இந்த பணியாளர்களுக்கு ரூ. 20,000/- சம்பளமாக தரலாம். அவுட் சோர்சிங் முறையில் உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Application form : Click Here
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More