தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம் || Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வேலை செய்யக்கூடியலர்கள் ஐந்து கோடியே ஐம்பது லட்சம் பேர் இருந்தாகத் தெரியவந்துள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் ஐந்து கோடியே 70 லட்சம் தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவும் என்றும் கணிக்கிடப்பட்டுள்ளது. எனவே மக்கள்தொகை உபரியை, மக்கள்தொகை ஆதாயமாக மாற்றிக்கொள்ளும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கிராமப்புறத்து ஏழைக்குடும்பங்களின் இளைஞர்களின் உதிறனை மேம்படுத்தி அதனால் அவர்களின் உற்பத்தித்தினைகப் பெருக்கி, அனைவரையும் உள்ளக்கடக்கிய வளர்ச்சித்திட்டங்களில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளும் தேசிய இலக்கினை எட்டும் நோக்கத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தீனதயாள் உபாத்ய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

முறையான படிப்பறிவு இல்லாமை, சந்தைப்படுத்தக் கூடிய திறன் இன்மை போன்ற காரணங்களால் கிராமப்புறத்து ஏழைமக்கள் நவீனயுகத்தில் போட்டியிடுவதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டங்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டம் நிதி உதவி அளிக்கிறது. பயிற்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, வேலையில் உயர்வு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

  1. ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பயன்கிட்டுகிறது. அவர்களுக்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் திறன்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
  2. அனைவரையும் உள்ளடக்கிய திட்டம், சமூகரீதியாகப் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 50 % சிறுபான்மையினர் 15 % பெண்கள் 33% என்று திறன்பயிற்சி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
  3. பயிற்சிக்கு முக்கியத்துவம் என்பதை மாற்றி, வேலையில் உயர்வு என்பதற்கு முக்கியம் அளிக்கப்படும். அதனால், தற்போது ஒரு வேலையில் இருப்பவர் தொடர்ந்து அதில் நீடிக்க வகைசெய்வதுடன் அந்த வேலையில் முன்னேற்றம் கிடைக்கவும்., வாய்ப்புகள் இருந்தால் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
  4. வேலைநியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலைநியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுத் தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காகப் புதிய இடத்திற்குச் செல்வதற்கு அங்கு தங்கியிருப்பதற்கான உதவிகளும் செய்து தரப்படும்.
  5. வேலைநியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலைநியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுத் தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காகப் புதிய இடத்திற்குச் செல்வதற்கும் அங்கு தங்கியிருப்பதற்குமான உதவிகளும் செய்து தரப்படும். பயிற்சி பெற்ற அனைவரும் பரஸ்பரம் தொடர்பில் இருப்பதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படும்.
  6. பயிற்சி பெறுகிறவர்கள் வேலை நியமனம் பெறுவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். பயிற்சி பெற்றவர்களில் குறைந்த பட்சம் 75 சதவீதம் பேராவது வேலை பெறுவது உறுதி செய்யப்படும்.
  7. பயிற்சி திட்டத்தைச் செயல்படுத்தும் பங்காளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துதல். கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் அளிக்கக்கூடிய புதிய முகமைகளை உருவாக்குவதுடன், அந்த முகமைகளின் பயிற்றுவிக்கும் திறன்களும் வளர்த்தெடுக்கப்படும்.
  8. சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கவனம் செலுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் (HIMMYAT) வடகிழக்கு மாநிலங்கள், இடது சாரி தீவரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் (ROSHINI) ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்
  9. தரமான பயிற்சிகள் அளிக்கப்டும். எல்லாவிதமான திறன் பயிற்சிகளுக்கு நிலையான செயல்முறைகள் வரையறுக்கப்படும் எனவே உள்ளுர் மட்டத்தில் அவற்றைச் சௌகாரியம் போல மாற்றிக்கொள்ள முடியாது. பயிற்சிகள் பற்றிய ஆய்வுகளின் புகைப்பட / வீடியோ பதிவுகளில் கூட நாளும் நேரமும் பதிவு செய்யப்படும்.

பயிற்சி பெறுவதற்கான தகுதிகளும் செயல்படுத்தும் விதமும்

  1. 15 வயது 35 வயது வரையிலான உள்ள கிராமப்புற இளைஞர்கள்
  2. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளர்கள் எனில் வயது வரம்பு 45 வரை
  3. தீனதயாள் உபாதியாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித்திட்டம் மூன்றடுக்கு முறையில் அமல்படுத்திப்படுகிறது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் உள்ள இத்திட்டத்தின் தேசியத்தன்மை அலகு, கொள்கை வரைவு, தொழில்நுட்ப ஆதாரவு போன்றவற்றை அளிக்கும். மாநிலங்களில் உள்ள அலகுகள் செயல்படுத்துவதற்கான ஆதரவை அளிக்கும் பயிற்சித்திட்ட அமலாக்க முகமைகள், பயிற்சி மற்றும் வேலைக்கு அமர்த்தால் ஆகியவற்றை மேற்கொள்ளும்.

பயிற்சித் திட்ட அமலாக்க முகமைகள்

  1. இந்திய அறக்கட்டளைச் சட்டம் அல்லது மாநில சங்கப் பதிவுச் சட்டம் அல்லது மாநிலக்கூட்டுறவு சங்கச்சட்டம், அல்லது பல மாநிலக் கூட்டுறவு அல்லது கம்பெனிகள் சட்டம் 2013 அல்லது பொறுப்பு வரம்பற்ற கூட்டாண்மைச் சட்டம் 2008 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது மாநில அளவிலோ தேசிய அளவிலோ செயல்படும் அரச்சுத்துறை அல்லது அரசு சார்ந்த துறையாக இருக்க வேண்டும்.
  2. இந்தியாவில் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மூன்று நிதி ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டிருக்க வேண்டும். (தேசியத்திறன் மேம்பாட்டுக்கழகப் பங்காளர்களுக்கு இந்த நிபந்தனை கிடையாது.
  3. மூன்று நிதியாண்டு வரவு செலவுகணக்கில் குறைந்த பட்சம் இரண்டு நிதியாண்டுகளில் நிகர மதிப்பு எதிர்மறையாக இருக்ககூடாது. (தேசியத்திறன் மேம்பாட்டுக்கழகப் பங்காளர்களுக்கு இந்த நிபந்தனையும் பொருந்தாது)
  4. பயிற்சித் திட்டத்திற்கான மதிப்பீட்டை விட, வரவு – செலவு மதிப்பு, குறைந்த பட்சம் 25 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும்.
  5. கீழ்க்காணும் வசதிகளை அளிக்கும் பயிற்சித்திட்ட அமலாக்க முகமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருதல்
  • தமது நிறுவனத்திலேயே வேலைவாய்ப்புத் தருதல்
  • தொழிற்சாலைகளிடம் இருந்து நிதி உதவி பெற்றுப் பணிப்பழகுநர்களுக்கு பயிற்சி அளித்தல்
  • இரண்டாண்டுகளில் குறைந்த பட்சம் பத்தாயிரம் இளைஞர்க்குப் பயிற்சி அளித்து வேலையில் அமர்த்துவதற்கு உத்தரவாதம் அளித்தல்.
  • தேசியத் தரமதிப்பீட்டுக்குழுவினால் குறைந்த பட்சம் 3.5 புள்ளிகள் வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் சான்று பெற்ற சமுதாயக்கல்லூரிகள்.

பயிற்சித்திட்டத்திற்கான நிதி ஆதரவு

தொழில்துறையினர் வேண்டுகிற திறன்களைப் பயிற்சி மூலம் வழங்கி, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிற முகமைகளுக்குப் பயிற்சி திட்டத்தின் கால அளவு மற்றும் உண்முறை வசதிகளைப் பொறுத்து ஒரு பயிறசியாளருக்குக் குறைந்தபட்சமாக ரூ. 25,690 முதல் அதிகபட்சமாக ரூ. 1லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும். பயிற்சிக்காலம் குறைந்த 576 மணிநேரம் (மூன்று மாதங்கள்) முதல் 2304 மணிநேரம் (12 மாதங்கள்) வரை இருக்கலாம்.

பயிற்சி அளிப்பதற்கான செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவு (உண்முறைத்திட்டங்களில் மட்டும்) போக்குவரத்துச் செலவு, வேலைக்கு அமர்த்திய பிறகு தரப்படும் ஆதரவிற்கான செலவு, வேலையில் உயர்நிலைக்குப் போவதற்கான செலவு, போன்றவை நிதி உதவியில் அடங்கும்.

எதிர்ப்பார்புகள்

தீதையாள் உபாத்யாய கிராம்பபுற திறன் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திறன்பயிற்சி அளிக்க நிதி உதவி அளிக்கப்படும். கட்டுமானம், ஆடோமொபைல், தோல்பொருள்கள், மின்சாதனங்கள், குழாய் பொருத்துநர், நவரத்தின கற்கள், ஆபரணங்கள், உணவகம், தங்கும் விடுதி, சில்லறை வாணிகம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்லதற்கான திறன்களைத் தருவதாகப் பயிற்சிகள் இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி பெறும் கிராமப்புற அளைஞர்களில் குறைந்து 75% பேருக்கு வேலைநியமனம் உறுதி செய்யப்பட வேண்டும்.

தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) மற்றும் துறைகள் திறன் கவுன்சில் போன்ற தேசிய அளவிலான அமைப்புகள் நிர்ணயித்துள்ளவாறு பாடத்திட்டங்கள் பின்பற்ற வேண்டும்.

ஓரு குறிப்பிட்ட துறைக்கான திறன்பயிற்சி அளிப்பதோடு, வேலை கிடைப்பதாகவும், அப்பயிற்சி இருக்க வேண்டும். மேலும் மென்திறன், செயல்முறை ஆங்கில அறிவு, செயல்முறை கணனி அறிவு போன்றவையும் வழங்கப்படவேண்டும்.

இந்த திட்டம் நாடு முழுமைக்கும் ஆனது. தற்சமயம் 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 460 மாவட்டங்களில், 82 பயிற்சி முகமைகள் மூலம் 18 விதமான தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : http://ddugky.gov.in/

admin

Recent Posts

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? இனி நடவடிக்கை – மத்திய அரசு

வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More

37 minutes ago

பிஎம் கிசான் திட்டத்தில் இனி 12,000 ரூபாய்.. நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More

15 hours ago

இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்!

இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More

1 day ago

Vinesh Phogat likely to be disqualified, to miss Paris Olympic medal

Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More

5 months ago

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More

5 months ago

How to apply Chief Minister health insurance card in tamil pmjay cmchis health insurance card apply

💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More

8 months ago