சென்னை: இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இவ்வளவு கோடியில் பணம் பெற்றால் நீங்கள் என்ன நன்மைகள் மக்களுக்கு செய்வீர்கள் என்று திமுக மற்றும் பாஜகவிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அதிரடியாக ரத்து செய்தது. மேலும் கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் ஏற்கனவே உத்தரவிட்டபடி, தேர்தல் பத்திர விவரங்களை மறுநாளே அதாவது மார்ச் 12-ந் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டனர். அதன்படி மறுநாள் மாலையில் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
அதில் கடந்த 2019 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி இருப்பதாகவும் எஸ்பிஐ கூறியிருந்ததுது. இதனிடையே இந்த விவரங்களை 15-ந்தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் நேற்று மாலையில் வெளியிட்டது. 300 பக்கம் கொண்ட இரண்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. முதல் பட்டியலில் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், எந்த தேதியில் அவை வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை ஆகிய விவரங்கள் உள்ளன.
இரண்டாவது பட்டியலில் அவை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் நாட்டின் பெரிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் விவரங்களை பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பட்டியலில் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் தேர்தல பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளது. இது கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனரான மார்ட்டினின் நிறுவனம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளான இந்த நிறுவனம் ரூ.1,368 கோடிக்கு 2 நிறுவனங்களின் கீழ் தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது.
அதேபோல் மேகா என்ஜினீயரிங் லிட். – ரூ.966 கோடி வழங்கி உள்ளது. மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை பெற்றுள்ள மேகா என்ஜினீயரிங் நிறுவனம் ரூ.966 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. குவிக் சப்ளை செயின் லிட் நிறுவனம் என்ற ரூ.410 கோடி, ஹால்டியா எனர்ஜி ரூ.377 கோடிக்கு பத்திரங்கள் வாங்கியுள்ளன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடி, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் 3 நிறுவனங்கள் சேர்த்து ரூ.246 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வாங்கி உள்ளன.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில், பாஜக, காங்கிரஸ், அதிமுக, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.இதுபற்றி கோவையைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் வெற்றிக்கழக நிர்வாகி திமுக மற்றும் பாஜக குறித்து கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “ஊழல்வாத அரசியலின் உதாரணம்.. பாஜகவை கேளுங்கள்.. திமுகவை கேளுங்கள்.. நம் நாட்டை ஆளும் பிஜேபி மற்றும் நம் தமிழ் நாட்டை ஆளும் தி.மு.க கட்சிகளிடம் நாம் கேள்விகள் கேட்க வேண்டும்.
இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இவ்வளவு கோடியில் பணம் பெற்றால் நீங்கள் என்ன நன்மைகள் மக்களுக்கு செய்வீர்கள் என்று கேளுங்கள் எனறு விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் அரசியல் பத்திரங்களை எந்த கட்சி, எவ்வளவு வாங்கியது என்ற விவரங்கள் தெரிந்து கொள்ள எலேச்டின் கமிஷன் இணையதளதில் டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்த இணையதளத்தின் முகவரியையும் இணைத்திருக்கிறது.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More