எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது’ அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெறுவோரின் வயதை அதிகரித்த காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது.
இதனால், அரசுப் பணியாளா் தோவாணையம் சாா்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோவுகள் நடைபெற வாய்ப்பில்லை என்று இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்ற தகவல் தவறானது எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More
SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More
individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More