டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தென் மாநிலங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதிக்கும் என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கிடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
விவாதம் மத்திய அரசின் இந்த அறிவிப்பு, இந்திய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, “தொகுதிகள் அதிகரித்தால் தென் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகுமே?” என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இதற்கிடையே மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இது தொடர்பாக ஆங்கில இதழான ஹிந்துஸ்தான் டைமஸுக்கு பேட்டியளித்துள்ளார்.
அது தொடர்பாக நாம் பார்க்கலாம்! வார்த்தையே இல்லையே தொகுதி மறுசீரமைப்பு வரைவு மசோதாவில் ‘விகிதாச்சாரம்’ (Proportion) என்ற வார்த்தையே இல்லையே என்ற கேள்விக்கு அவர், “மசோதா தாக்கல் செய்யும்போது அது தெளிவாகக் குறிப்பிடப்படும்” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.
மாநிலங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கும் என்றும், இது அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அதாவது, மொத்த இடங்கள் 850-ஆக அதிகரித்தாலும், மாநிலங்களுக்கு இடையேயான பவர் பேலன்ஸ் மாறாது என்பது தான் மத்திய அரசின் வாதம்.
தற்போதுள்ள 543 இடங்களை ஏன் திடீரென 850ஆக (சுமார் 50% உயர்வு) அதிகரிக்க வேண்டும்? அதற்கு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், “இதைப் பற்றி நாங்கள் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளிடம் விளக்கியுள்ளோம். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருப்பதால்தான் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படுகிறது.
பெரிய சுமை இந்தியாவில் ஒரு எம்.பி சராசரியாக 25 முதல் 27 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.. இது கிட்டத்தட்ட ஒரு சிறிய நாட்டின் மக்கள் தொகைக்குச் சமம். இங்கிலாந்தில் 70,000 பேருக்கு ஒரு எம்.பி இருக்கும்போது, இந்தியாவில் 140 கோடி மக்களுக்கு வெறும் 543 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர்.
1971ல் தொகுதி மறுசீரமைப்பு நடந்தபோது மக்கள் தொகை 60 கோடிக்கும் குறைவு, இன்று 140 கோடிக்கும் அதிகம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எம்.பி-க்களுக்கு மிக பெரிய சுமையாகும்” என்றார். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும்போது ஏன் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் என்று எதிர்க்கட்சிகள் கேள்விக்கு ரிஜிஜு, “ஒவ்வொரு நாளும் இந்தச் சுமை அதிகமாகிறது. காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர மற்றவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கேரளா, அசாம் தேர்தலுக்கு முன்பே இதைச் செய்திருக்க முடியும்.. ஆனால் இப்போதுதான் சரியான நேரம்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
கேள்வி “850 சீட்கள்” என்பது வெறும் எண்ணிக்கை மாற்றம் மட்டுமல்ல.. அது இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்பையே மாற்றப்போகும் ஒரு திட்டம். மகளிருக்கு இடம் கொடுப்பதற்காக இடங்களை அதிகரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், “விகிதாச்சாரம் மாறாது” என்று அமைச்சர் வாய்மொழியாகச் சொல்வது சட்டப்பூர்வமாக எப்படிச் செயல்படப்போகிறது என்பதுதான் தென் மாநிலங்களின் மில்லியன் டாலர் கேள்வி.
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More