புதிர் போட்டிக்கான விடை
அனைத்து ரயில்களும் அதிரடியாக ரத்து..!
நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு ஜூலை மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் கடந்த 1-ம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றனர்.
மேலும், ரயில் சேவையை மே 12ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது. முதற்கட்டமாக 15 ரயில்கள் டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ரயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டதால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். இதே கருத்தையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அதில், சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்திற்கு மே 31வரை விமான சேவையும், ரயில் சேவையும் தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று தமிழகத்தில் தமிழக வருகிற 31-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது அறிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட 2 ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அட்டவணைப்படி ஜூன் 30ம் தேதி வரையில் இயங்கும் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து ரயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30ம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும் திருப்பித் தரப்படும். சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு 4வது முறையாக ஊரடங்கை ஜூலை மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More