கொரோனா உளவியல்…..
நம் நாட்டின் கொரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லை…… 😎
ஏன்…??!
உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.
“குப்ளர் ரோஸ் மாடல்” என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு ஏதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து போன்றவை நடக்கும் போது, அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான்.
அவை….
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance
1.Denial –
அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கொரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும், நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று மீண்டும் மறுத்தது… 🤫
2.Anger –
கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது. 😠
3. Bargain –
கொரோனா வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது. 😷
4. Depression –
இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம், மனச்சோர்வு அடைவது. 😢
5. Acceptance –
கடைசி கட்டம். வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. அதாவது….. கொரோனாவுடன் வாழப் பழகிக்கொண்டது 😂😂
இந்த 5 நிலைகள், கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும் பொருந்தும்.
புத்திசாலி என்ன செய்வான் ?….
“இதுவும் கடந்து போகும்” என்று உணர்ந்து , முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மன அழுத்தம் இல்லாமல், வாழ்வில் முன்னேற்றம் அடைவான். 💪
ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல் சிக்கிக்கொள்பவன், மன அழுத்தம் ஏற்பட்டு, மனநோயாளியாகிறான் ! 😴
ஆக,
உணர்வோம்… தெளிவோம்….
தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, வெல்வோம்….
இதுவும் கடந்து போகும் !
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More