நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.
COVID-19 ஊரடங்கை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி இலவசம் டேட்டா நன்மையை வழங்குகிறது. இருப்பினும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக அது போதியதாக இல்லை, எனவே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நெட்வொர்க்குகளின் கீழ் கிடைக்கப்பெறும் 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா நன்மை அடங்கிய டாப் 10 சிறந்த திட்டங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.
ரூ.500 க்குள் கிடைக்கும் சிறந்த ஏர்டெல் திட்டங்கள்
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் தற்போது தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை 28 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் உங்களுக்கு அதிக நன்மை வழங்கக்கூடிய திட்டம் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.249 திட்டம்
ஏர்டெலின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.298 திட்டம்
ஏர்டெலின் ரூ.298 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.398 திட்டம்
ஏர்டெலின் ரூ.398 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 84 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.449 திட்டம்
ஏர்டெலின் ரூ.449 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.299 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.299 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
வோடபோன் ரூ.398 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.398 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 84 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.449 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.449 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
ஜியோவின் சிறந்த திட்டங்கள்
ஜியோவின் கீழ் கிடைக்கப்பெறும் சிறந்த திட்டங்களை இப்போது பார்த்துவிடலாம், ரிலையன்ஸ் ஜியோ தற்போது தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை 28 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. ஜியோ நெட்வொர்க்கில் ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த நன்மை கொண்ட திட்டங்களைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
ஜியோ ரூ.199 திட்டம்
ஜியோவின் ரூ.199 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ – ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ அல்லாத நிமிடங்கள் அதாவது, உங்களுடைய ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜியோ ரூ.249 திட்டம்
ஜியோவின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ – ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ அல்லாத ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜியோ ரூ.349 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ – ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 1000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்களுக்கு கிடைக்கிறது. ஜியோ அல்லாத ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜியோ ரூ.444 திட்டம்
ஜியோவின் ரூ.444 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ – ஜியோ குரல் அழைப்பு, பிற ஆபரேட்டர்களுக்கான 2000 ஜியோ அல்லாத நிமிடங்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது. ஜியோ அல்லாத ஆஃப்-நெட் நிமிடங்கள் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More