படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சு. ஜான்பிலிப்போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்கும் மனுதாரர்கள் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள ஆதிதிராவிடர் – பழங்குடியினர் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. இதர வகுப்பினர் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
தகுதி உடைய மனுதாரர்கள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு உடனடியாக நேரில் வந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்ப படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிற இடங்களில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்டு வருவாய் ஆய்வாளர் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் பெறப்பட்ட விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றுகளுடன் வருகிற மாவட்டம் வாரியாக தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Important Links:
Notification Link: Click Here
Application Link: Click Here
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More