விவோ நிறுவனத்தின் வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ வை19 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய விவோ வை19 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. ஏ.ஐ. கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 2.0 யு.ஐ. கொண்டிருக்கும் விவோ வை19 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, எஃப்.எம். ரேடியோ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.
விவோ வை19 அம்சங்கள்:
விவோ வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 13,999 விலையில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மேக்னெடிக் பிளாக் மற்றும் ஸ்ப்ரிங் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More