இந்த திட்டத்தின் கீழ் தான் 60 வயதுக்கு மேலான மூத்த குடிமக்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வரை பென்ஷன் கொடுக்க இருக்கிறார்கள். இந்த திட்டம் பிப்ரவரி 15, 2019-ல் இருந்து செயல்பாட்டுக்கு வருகிறது. அதாவது அமைப்புசாரா தொழிலாளர்கள் வரும் பிப்ரவரி 15, 2019 முதல் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளலாம்.
எனவே இந்த திட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமா இல்லையா..? இந்த கட்டுரை முழுக்க முழுக்க அரசின் தரவுகளின் அடிப்படையில் எழுதி இருக்கிறோம். சில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதங்களைக் குறிப்பிட முடியாததால் அவைகளை ஆங்கிலத்தியேலே கொடுத்திருக்கிறோம்.
சந்தேகம் இருப்பவர்கள் அர்சின் சட்ட மூலத்தை டவுன்லோட் செய்து படித்துக் கொள்ளவும்:
யாரெல்லாம் வருவார்கள்
home based workers, street vendors, mid-day meal workers, head loaders, brick kiln workers, cobblers, rag pickers, domestic workers, washer men, rickshaw pullers, landless labourers, own account workers, agricultural workers, construction workers, beedi workers, handloom workers, leather workers, audio- visual workers and similar other occupations. மேலே ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கும் வேலைகளில் இருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ரூபாய் பெற முடியும்.
மாதம் 15,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும். அதே போல் 18 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும். குறிப்பாக ஆதார் எண்ணும், ஒரு வங்கிக் கணக்கும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி ஆதார் மற்ரும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தில் இடம் கிடையாதாம்.
பிஎஃப் பிடித்தம் செய்யப்படுபவர்கள், ESI பிடித்தம் செய்யப்படுபவர்கள், என்பிஎஸ் (NPS) பிடித்தம் செய்யப்படுபவர்கள், இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொள்ள முடியாது. அதே போல் வருமான வரி செலுத்தியவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் சேர முடியாது. எத்தனை ஆண்டுகளுக்கு என சொல்லப்படவில்லை.
2000 சதுர அடி மற்றும் அதற்கு மேல் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் கிடையாது. அதே போல் 2000 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்குக் கூட இந்த திட்டத்தில் சேர முடியாது. சொந்தமாக 300 சதுர அடிக்கு மேல் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், பொருட்களை தயார் செய்பவர்கள், அல்லது வேறு ஏதோ வணிக நோக்கில் வேலை செய்ய பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டத்தில் இடம் இல்லை. அந்த 300 அடி நிலத்தை வாடகைக்கு எடுத்து வியாபார நோக்கில் என்ன செய்தாலும் சரி இந்த திட்டத்தில் இடம் கிடையாது.
க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள், ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் சந்தாவாக செலுத்தி க்ளப்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தின் கீழ் இடம் கிடையாது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற மோட்டார் வாகனங்களை வைத்திருப்பவர்களுக்குக் கூட இந்த திட்டம் கிடையாது.
மேலே சொன்னது போல் வங்கிக் கணக்கில் மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையை திட்டத்தில் இருப்பவர்கள் வரவு வைத்தால் போதும், ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிகளில் ஆட்டோ டெபிட் முறையில் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் திட்டத்துக்கான பங்கை அரசே திட்டத்தில் இருப்பவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து, உங்கள் திட்ட கணக்குக்கு எடுத்துக் கொள்ளும் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் இந்த பணப் பரிமாற்ற விவரம் உறுதி செய்யப்படவில்லை.
18 வயதில் இளைஞர் ஒருவர் அமைப்பு சாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் மாதம் 55 ரூபாயும், அரசு அந்த இளைஞருக்கு மாதம் 55 ரூபாயும் முதலீடு செய்யும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் 5 – 10 ரூபாய் வரை நம் வயதைப் பொறுத்து அதிகரிக்கும். நாம் என்ன தொகை செலுத்துகிறோமோ அதே தொகையை மத்திய அரசும் செலுத்தும். இப்படி 18 வயது இளைஞருக்கு 55 ரூபாயில் தொடங்கி 30 வயதுக் காரருக்கு 105 ரூபாயும், நாற்பது வயதுக்காரருக்கு 200 ரூபாயும் செலுத்த வேண்டும். 40-வது வயது முதல் 60-வது வயது பூர்த்தி ஆகும் மாதம் வரை மாதம் 200 ரூபாயை திட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் பங்காக செலுத்த வேண்டும்.
ஒருவர் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் திட்டத்தில் இணைந்து விட்டால் அவருக்கு 60 வயது பூர்த்தி ஆகும் வரை மாதாமாதம் தன் தவனைகளை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 61-வது வயது தொடங்கும் போது தான் அவருக்கான முதல் 3000 ரூபாய் செலுத்தப்படும்.
ஒருவர் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தத் தவறினால் அடுத்து வரும் மாதங்களில் வட்டியோடு முழு தொகையும் செலுத்த வேண்டி இருக்கும். செலுத்தாத தவனைகளுக்கான வட்டித் தொகையை தொழிலாளர் அமைச்சகம் நிர்ணயிக்குமாம்.
இந்த திட்டம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தில்லியில் இருக்கும் தொழிலாளர் நல அமைச்சக இயக்குநரகம் எடுக்கும் முடிவும், இணைச் செயலர் எடுக்கும் முடிவுகளும் தான் இறுதியானதாம். அதற்கு மேல் பிரச்னையை மத்திய அரசிடம் முறையிடலாம். ஆனால் மத்திய அரசு பிரச்னைக்கு சொல்லும் தீப்பே இறுதியானது.
ஒருவர் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து 08 ஆண்டுகள் தன் பங்கைச் செலுத்தி வருகிறார். 09-ம் ஆண்டில் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற விரும்புகிறார் என்றால் அவருக்கு அவர் செலுத்திய பங்கு மட்டுமே வங்கி சேமிப்புக் கணக்கு வட்டியோடு திருப்பித் தரப்படும். அவர் சார்பாக அரசு செலுத்திய பங்கு கொடுக்கப்படாது. இது தான் திட்டத்தில் இணைந்து 10 வருடங்களுக்குள் திட்டத்தை விட்டு வெளியேறுபவர்களின் நிலை. இதில் அரசு பங்கு திருப்பிக் கொடுக்கப்படாது.
ஒருவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்து 11-வது வருடத்தில் (10 வருடம் கழித்து) வெளியேறுகிறார் என்றால், அவர் அது நாள் வரை செலுத்தி இருந்த தொகையையும், அதற்கான வட்டித் தொகையை மட்டுமே கொடுப்பார்கள். இதில் வங்கி வட்டி அல்லது தொழிலாளர் நல அமைச்சகம் கணக்கிடும் வட்டியில் எது அதிகமோ அந்த வட்டியைத் தான் கொடுப்பார்கள். இது தான் திட்டத்தில் இணைந்து 10 வருடங்களுக்கு மேல் திட்டத்தை விட்டு வெளியேறுபவர்களின் நிலை. இதிலும் அரசுப் பங்கு திருப்பிக் கொடுக்கப்படாது.
ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் மாதா மாதம் பணம் செலுத்துபவர் இறந்துவிட்டால் அவரின் கணவர் அல்லது மனைவி இந்த திட்டத்தை தொடரலாம். அப்படி இல்லை என்றால் அவரின் பங்கு மற்றும் வட்டியை மட்டும் பெற்றுக் கொண்டு திட்டத்தில் இருந்து வெளியேறலாம். இந்த இறப்பு சம்பவத்தில் கூட அரசு திட்டதாரருக்குச் செலுத்த பங்கு கொடுக்கப்படாது.
மேலே 10 வருடத்துக்குள், 10 வருடங்களுக்கு மேல், இறந்துவிட்டால் என மூன்று நிலைகளிலும் திட்டத்தில் இருப்பவர்களின் பங்கு மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால் அரசாங்கம் திட்டத்தில் இருப்பவர்களுக்காக கொடுக்கும் காசு திட்டதாரர்களுக்கு கொடுக்கப் படாது என்பதை சொன்னீர்கள். ஆனால் யாருக்கு போகும் எனச் சொல்லவில்லையே என்கிறீர்களா..? மீண்டும் அரசாங்கத்திடமே போய்விடும். வேறு ஏதாவது ரீதியில் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறினால், அதை அவ்வப் போது மத்திய அரசு தீர்த்து வைத்து சட்டமாக அறிவிக்கும்.
ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் மாதா மாதம் பணம் செலுத்துபவருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, உடல் ஊனமுற்றால் கூட அவரின் கணவர் அல்லது மனைவி இந்த திட்டத்தை தொடரலாம். அப்படி இல்லை என்றால் அவரின் பங்கு மற்றும் வட்டியை மட்டும் பெற்றுக் கொண்டு திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டால், திட்டல் சேர்ந்திருந்தவரின் மனைவிக்கு மட்டுமே 3,000 ரூபாயில் பாதி தொகையான 1,500 ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். திட்டத்தில் இருந்தவரின் மனைவி அல்லது கணவருக்குப் பிறகு யாருக்கும் கொடுக்கப்படாது.
Apply link Click Here
Scheme to Provide Nutritional Feed to Milch Cows with 50% Subsidy: Tuticorin Collector's Announcement கறவை… Read More
The Government of India introduced the PAN 2.0, the upgrade version of the PAN card with QR… Read More
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன்… Read More
TNPSC Group 4 Result update Read More
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More