Advertisement
Categories: Uncategorized

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing

Website Link 1: https://application.tahdco.com/

Website Link 2 : https://fast.tahdco.com/

website Link 3 : http://tahdco.com/tamil/index.php

தற்போது விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற புதிய திட்டம் கடந்த பட்ஜெட்டின் போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம்,பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதிகபட்சமாக 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

5 லட்சம் பெற தகுதிகள்: இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவரது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ நிலத்தை வாங்கிக் கொள்ளலாம்.


பத்திரப்பதிவு இலவசம்: இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. பயனாளிகள் வங்கி கடன் மூலமாக நிலம் வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர், மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுக வேண்டும்.

விண்ணப்பம் பெறப்படுகிறது: இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்கும் இந்த திட்டத்துக்காக 2024-25-ம் நிதியாண்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது மாவட்டம் தோறும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. தகுதியான ஆதிதிராவிட, பழங்குடியின மகளிர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என்று கூறினார்.

admin

Recent Posts

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 week ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

1 week ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

3 weeks ago