Advertisement
Categories: Uncategorized

மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3( முற்றிலும் தற்காலிகமானது) பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். 

நிறுவனம்: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3

காலியிடங்கள்: 10 

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 60,500 + இதர படிகள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்த வேண்டும். அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை மற்றும் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யுப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து செய்முறை தேர்வு, நேர்முகத் தேர்வு, இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதிபெற்ற விண்ணப்பத்தாரர்களைப் பொறுத்து 1:5 அல்லது புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி, அவர்களது முடிவின் அடிப்படையில், விண்ணப்பத்தாரர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், புதுக்கோட்டை மாவட்டம் – 622 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Notifiation%20-%20Recruitment%20for%20Steno%20Typists_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

admin

Recent Posts

SBI-ல் கணக்கு இருக்கா? ATM கார்டும் உங்ககிட்ட இருக்கா? ரூ. 450 வரை பிடிப்பு.. உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More

5 days ago

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சம் 2025: தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன்

தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More

7 days ago

நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவரா?.. பிப். 1ம் தேதி முதல் பணம் செலுத்த முடியாது.. RBI முக்கிய முடிவு!

UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More

1 week ago

மாதம் ரூ.210 கட்டினால்.. ரூ.10000 விடாமல் வரும்.. அருமையான பென்ஷன் திட்டம்.. சூப்பர் ஸ்பெஷாலிட்டீஸ

சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More

1 week ago

வெறும் ரூ.2000 முதலீடு செய்யுங்க.. ரூ.11,16,815 ரிட்டன்ஸ்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம வசதி…

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More

2 weeks ago