வாக்காளர் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5.44 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த அக். 27-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
நவ.4-ம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின. இப்பணியில் 68 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று, எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, ஆய்வு செய்து, பூர்த்தி செய்த படிவங்களை கணினியில் பதிவேற்றினர். இப்பணிகள் கடந்த டிச.14-ம் தேதி நிறைவடைந்தன.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்போது உரிய படிவங்களை பிஎல்ஓக்களிடமும் சமர்ப்பிக்கலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் 68,467 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது புதிதாக 6,568 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 75,035 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த அக்.27 நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 584 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. நடந்து முடிந்த எஸ்ஐஆர் திருத்தத்தின்படி, தமிழகத்தில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,06,332 பெண் வாக்காளர்கள், 7,191 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்களின் பெயர்கள் வரைவுவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த எஸ்ஐஆர் பணிகளின்போதே 5.19 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து படிவம்-6 பெறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் ஜன18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், ஆட்சேபனைகளையும் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.எஸ்ஐஆர் பணிகளில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில்
சர்வர்கள் முடங்கின: தங்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனதேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அலுவலக இணையதளங்களை பொதுமக்கள் நேற்று மாலை முதல் பார்வையிட்ட நிலையில், அந்த இணையதளங்களின் சர்வர்கள் முடங்கின.
குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மாநிலமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. குஜராத்தில் ஏற்கெனவே 5.08 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அங்கு எஸ்ஐஆர் பணிகள் நவ.4-ம் தேதி தொடங்கி, கடந்த 14-ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள். அங்கு வாக்காளர்கள் எண்ணிக்கை 4.34 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல, மேற்கு வங்கத்தில் 58.20 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெளியான பட்டியல்படி, தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More