சென்னை: தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750-லிருந்து 1,12,359-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*முதலில் கொரோனா பரிசோதனை செய்யும் போது நெகட்டிவ் என வருகிறது. மறுமுறை செய்யும் போது பாசிட்டிவ் வருவதால் சவாலாக உள்ளது. முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டுக்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் சவாலாக உள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,303-லிருந்து 3,435-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298-லிருந்து 45,300-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,282 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 400 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
* 10 விமானங்களில் தமிழகம் வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 8,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More
பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More
The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More