விவசாய மின் இணைப்பு
சென்னை: விவசாயிகள் பலர் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற விரும்புவார்கள்.. அவர்களுக்கான வாய்ப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விவசாயிகள் தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பலாம். முன்னதாக போதிய அவகாசம் இல்லாத காரணத்தால், விண்ணப்பிக்கமுடியவில்லை என்று கூறிவந்தார்கள். அவர்களுக்காவே காலநீட்டிப்பு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், “வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025-26-ம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள், அரசு சிறப்புத் திட்டங்கள் (தட்கல்) மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின் (ஆர்.எஸ்.எப்.எஸ்.) கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவர்.
இந்தநிலையில், தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது தொழில்நுட்ப சவால்கள் ஏற்பட்டது என்றும், போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அதன் அடிப்படையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற 31-ந்தேதி (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதலும் மற்றும் ஒதுக்கீடு அளவிற்கும் ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் மேற்பாா்வை பொறியாளா் பி. சித்ரா கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் தலைமையகத்திலிருந்து 2025 – 26-ஆம் ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய டிசம்பர் 15ம் தேதி தொடங்கி உத்தரவு பெறப்பட்டுள்ளது.
எனவே, தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் மின் பளுவின் தேவைக்கேற்ப விண்ணப்பதாரா்களின் விருப்பத்தின் அடிப்படையில் திட்டத் தொகையைச் செலுத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். 5 எச்.பி. வரை ரூ. 2.50 லட்சம், 5 எச்.பி.க்கு மேல் 7.5 எச்.பி. வரை ரூ. 2.75 லட்சம், 7.5 எச்.பி.க்கு மேல் 10 எச்.பி. வரை ரூ. 3 லட்சம், 10 எச்.பி.க்கு மேல் 15 எச்.பி. வரை ரூ. 4 லட்சம் திட்டத்தொகை செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதிக்குள்பட்ட செயற் பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்” இவ்வாறு கூறியிருந்தார்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More
வாக்காளர் பட்டியல் Read More