GOVT JOBS

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு

இந்திய அரசின் ரயில்வே துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக மூன்று விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு நேர்காணல் மூலமாக ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். யார் யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் இதில் எந்த மாதிரியான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன போன்ற முழு தகவல்களையும் இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பதவியின் பெயர் மற்றும் காலி பணியிடங்கள்

1.Nursing Superintendent-255 Vacancy

2.Pharmacist-51 Vacancy

3.Dresser/OTA/Hospital Attendant–255 Vacancy

Total Vacancies-561

கல்வித் தகுதி:

Nursing Superintendent:

நர்சிங் என்ற பணிக்கு B.sc. (Nursing) முடித்திருக்க வேண்டும்.
அனுபவம் தேவையில்லை.

Pharmacist:


10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதி இல்லை என்றால் Diploma In Pharmacy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

B.Pharm முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Dresser/OTA/Hospital Attendant:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதி எதுவும் கிடையாது.

வயது வரம்பு:

Nursing Superintendent என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சமாக 20 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dresser/OTA/Hospital Attendant என்ற பணிக்க விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் அதிகபட்சமாக 33 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு களும் உள்ளன

சம்பள விவரம்:

Nursing Superintendent என்ற பணிக்கு சம்பளம் PB-2+GP-4600/-/Level-7 என்ற அளவிலும்,

Pharmacist என்ற பணிக்கு சம்பளம்PB-2+GP-4200/-/Level-6 என்ற அளவிலும்.
Dresser/OTA/Hospital Attendant என்ற பணிக்கு சம்பளம் PB-1+GP-1800/-/Level-1 என்ற அளவிலும் கொடுக்கப்படும்.

கூடுதலாக தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

மேற்கண்ட பணிகளில் எந்த பணிக்கு உங்களுக்கு தகுதி உள்ளது என்பதை நிரூபித்து கொண்டு அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பிறகு விண்ணப்பப்படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளவும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை விண்ணப்ப படிவத்தில் முதலாவது இடத்தில் குறிப்பிடவும்.

விண்ணப்ப படிவத்தில் வலதுபுறத்தில் உங்களின் புகைப்படத்தை ஓட்டவும்.
விண்ணப்ப படிவத்தின் பின்பக்கத்தில் உங்களின் ஆதார் கார்டு நகல், பான் கார்டு நகல், இரண்டு புகைப்படங்கள், இருப்பிட சான்று நகல், கல்வித்தகுதி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல் மற்றும் கூடுதலாக ஏதேனும் தகுதிகள் இருந்தால் அந்த சான்றுக்கான நகல் அனைத்தையும் இணைத்து உங்களின் Self Attested சேர்த்து கீழே கொடுக்கப்பட்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

E-mail ID-srdmohkur@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு இம்மாதம் 22ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணலின் அடிப்படையில் தகுதியானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் பற்றிய விவரங்கள் பிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

DOWNLOAD APPLICATION

admin

Recent Posts

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? இனி நடவடிக்கை – மத்திய அரசு

வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More

9 hours ago

பிஎம் கிசான் திட்டத்தில் இனி 12,000 ரூபாய்.. நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More

23 hours ago

இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்!

இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More

1 day ago

Vinesh Phogat likely to be disqualified, to miss Paris Olympic medal

Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More

5 months ago

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More

5 months ago

How to apply Chief Minister health insurance card in tamil pmjay cmchis health insurance card apply

💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More

8 months ago