சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதியை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்
ஜூன் 17-ம் தேதி ஆங்கிலப்பாடம்
ஜூன் 19-ம் தேதி கணிதம்
ஜூன் 20-ம் தேதி மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
ஜூன் 22-ம் தேதி அறிவியல்
ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்
ஜூன் 25-ம் தேதி தொழில்கல்வி தேர்வு
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More