ஒரு பொருளுக்கு எகிப்திய கடவுளான கேயாஸ் மற்றும் ஈவில் பெயரிடப்பட்டால், அது அச்சுறுத்தும் தோற்றம் அல்லது தீங்கிழைக்கும் முனைகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் பிந்தைய கேயாஸ் கடவுளுக்குப் பிறகு ஒரு சிறிய கோள் ஒன்று அப்போபிஸ் -99942 என பெயரிடப்பட்டுள்ளது. இது நம் கிரகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் 2068-க்குள் பூமியை மோதகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அப்படியானால் அபோகாலிப்டிக் கணிப்பு ஒரு தீர்க்கதரிசனம் மூலமோ அல்லது எந்த அறிவியல் புனைகதை மூலமோ மேற்கொள்ளப்படவில்லை. அது உண்மையான அறிவியல். சிறுகோள் 400 மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாசா இதை ஒரு ‘பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்’ என்று வகைப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றுக்கள் மாயன் காலெண்டர்கள் தொடர்பான தவறான தகவல்களால் தூண்டப்பட்டிருந்தாலும், இந்த தகவலை விஞ்ஞானிகளும் ஆதரித்தனர்.
இருப்பினும், விஞ்ஞானம் தொடர்பான கணிப்புகளும் துல்லியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. கடந்த 2004ம் ஆண்டில் டேவிட் ஜே. தோலென் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அதே சிறுகோள் சில வட்டங்களில் சற்று எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சுபாரு தொலைநோக்கியின் உதவியுடன், 2029-க்குள் அந்த கோள் பூமியை தாக்கும் என்று வானியலாளர்கள் கூறினர். அந்த சிறுகோள் யார்கோவ்ஸ்கி ஆக்ஸலரேஷன் என்று அழைக்கப்படும் வழியாக சென்றது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சூரிய ஒளியால் வான் நகரும் உடல்கள் மீது செயல்படும் ஒரு சிறிய சக்தி. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சூரிய ஒளி என்பது நம்மால் உணர முடியாத சக்தி, இது மாபெரும் கற்பாறையை நமது கிரகத்தை நோக்கித் தள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் 2029 ஆண்டு பூமியை நெருங்கும் கோளானது மோதலில் முடிவடையாவிட்டாலும், பூமியை இன்னும் மிக நெருக்கமாக கடந்து செல்லும் என கணிக்கபட்டுள்ளது.
முன்னதாக, மோதலுக்கான வாய்ப்புகள் 2.7% நிகழ்தகவு என மதிப்பிடப்பட்டது. அவை 2029ல் பறக்கும்போது பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு காட்சியாக இருக்கும் என்றும் அவற்றால் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து அமெரிக்காவையும் கடக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால் 2017 தரவும் மற்ற அனைத்து காரணிகளும் 2068 ஆம் ஆண்டில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய கணிப்புகளை விட இது மிகவும் துல்லியமானதாக கருதப்படுகிறது.ஏனெனில் அதிக நேரம், தரவு மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை கொண்டு அதன் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கணிப்பு தேதி அல்லது தூரம் அல்லது சக்தியை மதிப்பிடுவதில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கும். ஆனால் எந்த பிழையும் இல்லாமல் மற்றும் தரவு துல்லியமாக இருந்தால், அப்போபிஸ் வெறுமனே பூமியின் மேல் பறப்பதை விட அதிகமான சேதத்தை ஏற்படுத்தும் என உறுதியாகக் கூறலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது உண்மையில் 2068ம் ஆண்டு 1 இல் 150 என்ற விகிதத்தில் மோதக்கூடும் என அதிர்ச்சியளித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More