Advertisement
Categories: Service

5 ஆண்டுகளில் முதல் முறை: வங்கிகளுக்கான ரெப்போ ரேட் குறைப்பு

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

மும்பை,

வங்கிகளின் ரெப்போ ரேட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின் ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரெப்போ ரேட் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா வெளியிட்டுள்ளார்.

ரெப்போ ரேட்  குறைவால், வங்கிகளில் வாங்கிய வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த நிதி ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் இன்று வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். அதேபோல குறையும் போது, வட்டி விகிதமும் குறையும். நீண்ட காலத்திற்கு பிறகு வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago