வீட்டுத்தோட்டம் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டேப் போகுது. பலரும் காய்கறிகளை தாங்களே விளைய வெச்சு சாப்பிட பழகிட்டாங்க. இந்த நிலையில, மாடித்தோட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசாங்கமும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கு. இது ஆரோக்கியமான செய்தி. ரெண்டு, மூணு வருஷமா அரசு, மானிய விலையில குரோபேக் பைகளை கொடுத்துட்டு இருக்கு. முன்பு இது எல்லா மாவட்டத்திலும் கிடைக்காது. ஆனா, இப்போ பெரும்பாலான மாவட்டங்கள்ல இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்காங்க.
கூடவே மாடித்தோட்டம் அமைப்பதற்கான மானிய விலையில் உபகரணங்களையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும். தற்போதுதான் இதனை விளம்பரப்படுத்தி வருகிறது தோட்டக்கலைத்துறை. ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு மானிய விலையில் சொட்டு நீர் குழாய் அமைப்புகள் மானிய விலையில்
இந்த கிட்-டில் 6 குரோபேக், அதில் 2 கிலோ எடையுள்ள காயர்பித் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
6 பாக்கெட் காய்கறி விதைகள்,
200 கிராம் அசோஸைபைரில்லம்,
200 கிராம் பாஸ்போ பாக்டீரியா,
200 பயோ கன்ட்ரோல் ஏஜென்ட்,
100 மில்லி அசாட்டிராக்டின் (Azadirachtin) அதாவது வேப்பெண்ணெய் மருந்து
– அத்துடன் ஒரு செயல் விளக்கக் கையேடு ஆகியவை ஒவ்வொரு கிட்டிலும் இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதிக விதைகள் இருக்கின்றன. நாட்டு ரக விதைகள் இல்லை. அனைத்தும் ஹைபிரிட் ரகங்கள்தான். ஒரு கிட்டின் விலை 850 ரூபாய். அதில் 40 சதவிகிதம் மானியம் போக 510 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
மாடித்தோட்டத்திற்குச் சொட்டுநீர் அமைப்பதற்காக அமைப்பின் மதிப்பு 1000 ரூபாய். அதில் மானியமாக 380 ரூபாய் போக, 720 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்த மானியம் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சரி, மாடித்தோட்டம் டிப்ஸ்க்கு போலாம்.வெண்டி
மாடித்தோட்டத்தில் செடிகளை நடவு செய்யும்போது போதுமான இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். பலர் குரோபேக்கில் மிகவும் நெருக்கமாக நடவு செய்துவிடுகிறார்கள். அதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே செடிகளின் அளவைப் பொறுத்து அரையடி முதல் ஒரு அடிவரை இடைவெளி விட்டு நட வேண்டும்.
நோய்களுக்கு எதிராக வேப்பெண்ணெய்யைப் போலவே வேப்ப இலையும் நன்றாகப் பயனளிக்கும். இதற்கு வேப்ப இலைகளைப் பறித்துக் காய வைக்க வேண்டும். காய்ந்த பிறகு, அதைத் தூள் செய்துகொள்ள வேண்டும். அந்தத் தூளை ஒவ்வொரு செடிக்கும் ஒரு 50 கிராம் அளவிற்கு வேர்ப்பகுதியில் இட்டுக் கிளறி விட வேண்டும். இது வேர் தொடர்பான நோய்கள் வராமல் காப்பதுடன் அடியுரமாகவும் செயல்படும்.வீட்டுத்தோட்டம்
பலர் மாடிகளில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கிறார்கள். அந்தச் செடிகளுக்கு அதிக சூரிய ஒளி தேவைப்படாது. சில குரோட்டன்ஸ் செடிகளை வீட்டிற்குள்ளேயே வைத்தும் வளர்க்கலாம். அப்படி வீட்டுக்குள் வளர்க்கும் குரோட்டன்ஸ் செடிகளை வாரம் ஒருமுறை வெளியே எடுத்துச் சூரிய ஒளியில் வைக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது. பலர் வீட்டுக்குள் இருக்கும் குரோட்டன்ஸ் செடிகளை வெயிலில் வைப்பதே இல்லை. அது சரியான நடைமுறை இல்லை. அதே நேரத்தில் மியூடன்ட் (mutant) வகை அலங்காரச் செடிகளை வெயிலில் வைக்கக் கூடாது. வெயிலில் அவை நிறம் மாறிவிடும்.
பலர் மல்லிகை, நித்திய மல்லி, முல்லை போன்ற மலர்ச் செடிகளை மாடியில் வைக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவ்வகை கொடி வகைச் செடிகளை வீட்டுக்குக் கீழ்ப் பகுதியில் நடவு செய்து, கொடிகளை மாடியில் ஏற்றி விடலாம். அந்தக் காலத்தில் பல வீடுகளின் முற்றங்கள் இந்த வகை கொடி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். இப்படிச் செய்வதால் மேலே பூச்செடிகள் வைக்கும் இடங்களில் வேறுவகையான செடிகளை வைக்க இடம் கிடைக்கும். இடவசதி குறைவாக உள்ளவர்கள் இந்த முறையைக் கையாளலாம்.வீட்டுத்தோட்டம்
ஒவ்வொரு வீட்டிலும் மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைச் செடிகள் இருக்க வேண்டும். குறிப்பாக, துளசி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, சோற்றுக்கற்றாழை, கற்பூரவள்ளி போன்றவை.
மாடித்தோட்டம் தொடர்பான சந்தேகங்களை கமென்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள். அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்படும்.
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More