74 தோல்விப் படங்களை கொடுத்தும் ஆடம்பர வாழ்க்கை வாழும் உச்ச நடிகர்.. ரூ. 360 கோடி சொத்து.. ரூ. 47 கோடி மதிப்பில் கார்கள்..
தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகில் பல நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் ஒருகட்டத்திற்கு பிறகு, அவர்களது மார்க்கெட் சரிந்தால், அவர்களால் ஆடம்பரமான சிறப்பு வாழ்க்கையை வாழ முடியாது.
ஒருகாலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்து, பின்னாளில் காணாமல் போன எத்தனையோ நடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் 74 பிளாப் படங்களை கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த்.
தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப் போனால், உலகளவிலும் பிரபலமடைந்தவர் தான் ரஜினி. ரஜினி படம் என்ற காரணத்திற்காகவே ரூ.100 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற அளவுக்கு அவரின் படங்களுக்கு இன்றளவும் எதிர்பார்ப்பு உள்ளது.
1950-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் ரஜினிகாந்த். பல கஷ்டங்களை சந்தித்த பிறகு 1975-ம் ஆண்டு ஆபூர்வ ராகங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார்.
இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அதில் 74 படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த படங்கள். ஆனால் 30 ஹிட் படங்கள், 18 சூப்பர் ஹிட் படங்கள், 10 பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள், மீதமுள்ளை ஓரளவு வசூலித்த படங்கள். அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 70 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இதன் காரணமாக அவர் தற்போது ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மெர்சிடஸ் ஜி வேகன், (Mercedes G Wagon), ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), ரோல்ஸ் ராய்ஸ் பான்ந்தோம் (Rolls Royce Phantom) கஸ்டம் மேட் லிம்யூசின் (Custom-made Limousine என ரஜினியிடம் தற்போது 4 ஆடம்பர சொகுசு கார்கள் உள்ளன. இந்த கார்களின் மதிப்பு ரூ. 47 கோடியை விட அதிமாகும். இவை தவிர சென்னையில் உள்ள ரஜினியின் வீடு 25 கொடி மதிப்புடையதாகும். மேலும் அவரிடம் 360 கொடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரபல ஆங்கில் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Scheme to Provide Nutritional Feed to Milch Cows with 50% Subsidy: Tuticorin Collector's Announcement கறவை… Read More
The Government of India introduced the PAN 2.0, the upgrade version of the PAN card with QR… Read More
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன்… Read More
TNPSC Group 4 Result update Read More
வீட்டுக் கடன்கள் என்பது இன்றைய காலத்தில் கிடைக்கும் மிக நீண்ட காலக் கடன்களில் ஒன்றாகும். அதிலும், பெண்களுக்கு சொந்த வீடு… Read More