Advertisement
Categories: Uncategorized

ESIC RECRUITMENT 2022 தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

ESIC recruitment 2022 for 385 UDC, MTS posts: தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் (ESIC) சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 385 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 15.02 2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த பணியிடங்களில் இந்தியா முழுவதும் மொத்தம் 3847 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதுநிலை எழுத்தர் (UPPER DIVISION CLERK)

காலியிடங்களின் எண்ணிக்கை : 150

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 15.02.2022 அன்று 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 25,500 – 81,100

சுருக்கெழுத்து தட்டச்சர் (STENO-TYPIST)

காலியிடங்களின் எண்ணிக்கை : 16

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 15.02.2022 அன்று 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 25,500 – 81,100

பன்முக உதவியாளர் (MULTI TASKING STAFF)

காலியிடங்களின் எண்ணிக்கை : 219

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 15.02.2022 அன்று 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு பகுதிகளாக நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.esic.nic.in/recruitments என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2022

விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8b3b8e968fff07db540d4312dc05be63.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

4 hours ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

7 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago