Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates
ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளதால் தங்கத்திற்கான தேவை குறைய தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகஸ்ட் 15ம் தேதி அலாஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்த முன்னெடுப்பு வெற்றி பெற்றால், தங்கத்திற்கான தேவை இன்னும் கூட குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று 22 கேரட் தங்கம், கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 290க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 18 கேரட் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.7,675க்கும் ஒரு சவரன் ரூ.61,400 விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்திருப்பது நகை பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் தற்போது நகை கடைக்கு படையெடுக்கின்றனர். இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படவில்லை.
சமீப நாட்களில் அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, தொடர்ந்து நடைபெற்ற போர்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தேர்ந்தெடுக்க வைத்தது. அதனால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்தது. இது வரும் வாரத்திலும் தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியக்கூடும் என வர்த்தக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More