Advertisement

இந்த பகுதிகளுக்கு பயணிக்க இ-பாஸ் கட்டாயம்!

 தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது .

மேலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அவசரமாக பயணிக்க இ-பாஸ் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 14 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லத் தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது.ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல இ.பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

பொதுமக்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

admin

Recent Posts

7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

சென்னை: 7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3,886 பணியாளர்கள், 305… Read More

1 day ago

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

3 days ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

5 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

5 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

7 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

1 week ago