SBI News: மூத்த குடிமக்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி விகிதம் பெற உதவுவதற்காக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஒரு சிறப்பு நிரந்தர வைப்பு திட்டத்தை (fixed deposit FD) அறிமுகப்படுத்தியுள்ளது. SBI Wecare Deposit என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அவர்களது நிரந்தர வைப்பில் கூடுதலாக 30 அடிப்படை புள்ளிகள் வட்டியை திட்டம் வழங்குகிறது.
தற்போதைய வீழ்ச்சி விகித முறையில் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க வங்கி அவர்களுக்காக சில்லரை கால வைப்பு பிரிவில் ‘SBI Wecare Deposit’ என்ற ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, என எஸ்பிஐ ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தற்போது மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ அனைத்து கடன் கால அளவுகளிலும் கூடுதலாக 50 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதத்தை வழங்குகிறது. மே 12 ஆம் தேதி முதல், ஏழு நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் நிரந்தர வைப்புகளில் மூத்த குடிமக்களுக்கு 3.80 சதவிகிதம் முதல் 6.50 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வழங்கும்.
SBI Loans: இந்த நேரம் அக்கம் பக்கத்தினர் உதவ மாட்டாங்க… உங்க வங்கி கை கொடுக்கும்!
எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எப்டி திட்டம். தெரிந்துக் கொள்ள வேண்டியவை.
1) பொருளாதாரத்தில் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடையும் காலத்தில், மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க, சில்லரை கால வைப்பு பிரிவில் மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறப்பு எப்டி திட்டத்தை SBI Wecare Deposit என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
2) இந்த புதிய தயாரிப்பின் கீழ், கூடுதலாக 30 அடிப்படை புள்ளிகள் பிரீமியம் மூத்த குடிமக்களின் சில்லரை கால வைப்புத் தொகைகளுக்கு, 5 வருடங்கள் மற்றும் அதற்கு கூடுதலான கடன் கால அளவு உள்ளவைகளுக்கு மட்டும் செலுத்தப்படும்.
3) மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ யின் சிறப்பு எப்டி திட்டம் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.
4) 5 வருடங்கள் மற்றும் அதற்கு கூடுதலான கடன் கால அளவு உள்ள கால வைப்பு தொகைகளுக்கு சாதாரண மக்களுக்கு பொருந்தும் விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டியை எஸ்பிஐ வழங்கும்.
கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது – புதிதாக வீடு வாங்குவோருக்கு அடித்தது ஜாக்பாட்
5) SBI Wecare Deposit FD ஐ தேர்ந்தெடுக்கும் மூத்த குடிமக்கள் 6.50 சதவிகிதம் வட்டி விகிதத்தை பெறுவார்கள்.
இதுபோன்ற வைப்புகளை முத்ர்வு காலத்துக்கு முன்கூட்டியே திரும்பப் பெற்றால் இந்த கூடுதல் வட்டி செலுத்தப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More