ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட் (SBI savings account) என்ற சேமிப்பு கணக்கு இருக்கிறதா? அப்படியென்றால், உடனே உங்கள் வங்கி கணக்கு ஸ்டேட்மெண்டை (bank statement) உன்னிப்பாக செக் செய்யுங்கள் மக்களே. ரூ. 236 முதல் ரூ. 425 வரை உங்கள் கணக்கில் இருந்து ஒரு தொகை உங்களுக்கே தெரியாமல் பிடிக்கப்பட்டுள்ளதா என்பது செக் செய்து பாருங்கள். எதற்காக இந்த தொகை பிடிக்கப்பட்டது? என்ற விபரங்கள் இங்கே.
எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அளிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) உடன் பல கோடி வாடிக்கையாளர்கள் இணைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு விதமான வங்கி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, SBI வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு (SBI customers) பல விதமான டெபிட் கார்டுகளை (debit card) வழங்கி வருகிறது.
SBI-ல் கணக்கு இருக்கா? ATM கார்டும் உங்ககிட்ட இருக்கா?
ATM இல் இருந்து பணம் எடுப்பது முதல் பல கேஷ் பேக் (cash back) நன்மைகள் மற்றும் ரிவார்டு (reward) பலன்களை இந்த கார்டுகள் வழங்குகிறது. எஸ்பிஐ வங்கி தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 11 வகையிலான டெபிட் கார்டுகளை வழங்கி வருகிறது. உங்களிடம் SBI வங்கி கணக்கு இருக்கிறதென்றால் (sbi account) கட்டாயம், கீழ் வரும் டெபிட் கார்டுகளில் ஏதேனும் ஒன்றாவது உங்களிடம் இருந்தாக வேண்டும்.இதில் எந்த வகை ATM அல்லது டெபிட் கார்டு உங்களிடம் இருக்கிறது?
ரூ. 236 முதல் ரூ. 450 வரை வருடாந்திர பராமரிப்பு கட்டணம் வசூல்:
இந்த ஒவ்வொரு விதமான டெபிட் கார்டுகளுக்கும் SBI வங்கி தனித்தனி வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை (an annual maintenance fee) அதன் வடிக்கையார்களிடம் இருந்து சமீபத்தில் வசூலித்துள்ளது. இதில் கிளாசிக் / சில்வர் / குளோபல் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு பயனர்களிடம் இருந்து ரூ. 200 + GST உடன் மொத்தமாக ரூ.236 கட்டணத்தை வசூலித்துள்ளது. அதேபோல் மற்ற பிரீமியம் கார்டு சேவைக்கு கூடுதல் கட்டணத்தை SBI வசூலித்துள்ளது.
உங்களிடம் SBI யுவா / கோல்டு / காம்போ / மை கார்டு டெபிட் கார்டு இருந்தால், வங்கி உங்களிடம் இருந்து ரூ. 250 + GST உடன் கட்டணத்தை (debit card fee) வசூலிக்கும். அதேபோல், பிளாட்டினம் டெபிட் கார்டு பயனர்களிடம் இருந்து ரூ. 325 + GST மற்றும் பிளாட்டினம் பிஸ்னன் ரூபே டெபிட் கார்டு பயனர்களிடம் இருந்து ரூ. 350 + GST கட்டணத்தையும் வசூலிக்கும்.
இருப்பதிலேயே இவர்களுக்கு தான் அதிக கட்டணம் வசூல்.. உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க மக்களே:இறுதியாக, SBI பிரைடு / பிரீமியம் பிஸ்னஸ் டெபிட் கார்டு பயனர்களிடம் இருந்து ரூ. 425 + GST என்ற அளவில் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கும் (sbi annual maintenance fee) என்று தெரிவித்துள்ளது. இந்த தொகை பல வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து தானாக பிடித்தம் (debit) செய்யப்பட்டுள்ளது. உங்கள் அக்கௌன்ட் பேலன்சில் திடீரெனெ ஒரு தொகை குறைவதாக உணர்ந்தால், அதற்கு இது தான் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஆகையால், உங்கள் வங்கி கணக்கில் மேல் கூறிய கட்டங்களில் இருந்து உங்கள் டெபிட் கார்டு உடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு தொகை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உடனே செக் செய்து பாருங்கள். வங்கி செல்லாமல் உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் (sbi bank statement) செக் செய்ய YONO மொபைல் ஆப்ஸ் (YONO mobile apps) பயன்படுத்துங்கள் அல்லது SBI ஆன்லைன் பேங்கிங் (sbi online banking) சேவையை பயன்படுத்துங்கள்.
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More