கொரோனா பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இக்காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைக்கே நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சேமிப்புப் பணத்தை எடுத்துப் பார்த்துப் பார்த்துச் செலவிட்டு வருகின்றனர். அரசு தரப்பில் பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாகத் தெரியவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாட்டு மக்களுக்கு சிறப்புக் கடன் சலுகைத் திட்டம் ஒன்றை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
மக்களின் அவசரக் கால பணத் தேவையைக் கருத்தில் கொண்டு, SBI Emergency Loan Scheme என்ற கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வெறும் 45 நிமிடங்களில் ரூ.5 லட்சம் வரையில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இக்கடனுக்கான மாதத் தவணையை ஆறு மாதங்கள் கழித்துச் செலுத்தத் தொடங்கலாம் என்று சலுகையை எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி இருக்கும் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
எஸ்பிஐ வழங்கும் இந்த அவசர காலக் கடன் திட்டத்துக்கான வட்டி விகிதம் 10.5 சதவீதமாகும். இது மற்ற தனிநபர் கடன்களை விடவும் வட்டி குறைவுதான். இக்கடன் வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் (YONO App) மூலமாகவும் விண்ணப்பம் செய்து பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்துகொண்டே வெறும் 45 நிமிடங்களில் இந்தக் கடனைப் பெற முடியும். இக்கடனைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்குத் தகுதி உள்ளதா என்பதைக் கண்டறிய, அவர்களது மொபைல் எண்ணில் இருந்து ’567676’ என்ற எண்ணுக்கு PAPL என்று டைப் செய்து, எஸ்பிஐ வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
எஸ்பிஐ வங்கியின் இந்த அவசரக் காலக் கடனைப் பெறுவதற்கு YONO App மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போனில் YONO
SBI App பதிவிறக்கவும் செய்து, அதில் Pre-approved Loan என்ற வசதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் எவ்வளவு கடன் தேவை, அதனை எவ்வளவு காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ வங்கியிடமிருந்து OTP எண் வரும். அதைப் பதிவு செய்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட கடன் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வங்கி கணக்குகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக… Read More
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More