Advertisement
Categories: Service

நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகிறது! பட்ஜெட் விலையில் Tata Tiago EV Facelift!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு வணிக நிறுவனமான டாடா குழுமம் (Tata Group) 1868-ம் ஆண்டு ஜாம்செட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது. உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனங்கள், எஃகு, நிதி மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் கார்களைத் தயாரிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் மின்சார வாகன (EV) தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

Tata Tiago EV facelift

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில் மின்சார வாகனங்களுக்கான மவுசு சமீப காலமாக அதிகரித்துககொண்டே வருகிறது. இதனால், முன்னணி கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுவனங்கள் அதிகளவில் மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது பட்ஜெட் விலையில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tata Tiago டாடாவின் பட்ஜெட் காரான Tata Tiago மின்சார கார் உள்ள நிலையில் தற்போது இந்த Tata Tiago EV facelift கார் அறிமுகமாகியுள்ளது.

இந்த கார் ரூ. 6.99 லட்சம் விலையில் கிடைக்கிறது மற்றும் 24 கிலோவாட் மற்றும் 19.2 கிலோவாட் பேட்டரி வேரியண்டுகளில் வருகிறது. 19.2 கிலோவாட் பேட்டரி 170கிமீ வரை மைலேஜ் அளிக்கிறது, 24 கிலோவாட் பேட்டரி 215கிமீ வரை மைலேஜ் அளிக்கிறது. சிறிய பேட்டரியுடன் 62 hp பவர் மற்றும் 110 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும், பெரிய பேட்டரியுடன் 75 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது..

மேலும், பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் BaaS (Battery-as-a-Service) முறையின் கீழ் ரூ. 4.69 லட்சத்திற்கும் கிடைக்கிறது. BaaS என்பது பேட்டரி நாம் தொடக்கத்திலேயே பணம் செலுத்தாமல், பயன்பாட்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தும் ஒரு நிதித் திட்டமாகும்.

எலெக்ட்ரிக் காரின் தொடக்க விலையைக் குறைப்பதற்காக இதனை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 19.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள Tata Tiago EV facelift கார் 8 வருடம் வாரண்டி அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அளிக்கப்படுகிறது. பெரிய பேட்டரி பேக்கிற்கு வாழ்நாள் வாரண்டியை முதல் உரிமையாளருக்கு மட்டும் அளிக்கிறது. இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. Smart 19, Pure+ 19, Pure+ 24 மற்றும் Creative+ 24 ஆகும்.

Smart (BaaS): ரூ. 4.69 லட்சம் (மற்றும் ஒரு கி.மீ-க்கு ரூ. 2.6 கட்டணம்)

Pure+ 19: ரூ. 6.99 லட்சம்

Pure+ 24: ரூ. 7.99 லட்சம்

Creative Plus 24: ரூ. 8.49 லட்சம்

இந்த புதிய மின்சார கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 215 கி.மீ முதல் 293 கி.மீ வரை செல்லும். ஃபாஸ்ட் சார்ஜர் (DC) மூலம் 35 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம்.

இந்த காரில் டூயல் டோன் கருப்பு மேற்கூரை, புதிதாக வடிவமைக்கப்பட்ட 15 இன்ச் அலாய் வீல்கள், காஸ்மோ கிரைன் வசதி கொண்டது. காரின் உட்புறமும் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட டூயல் டோன் ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 26.03 செ.மீட்டர் HT தொடுதிரை, வயர்லஸ் சார்ஜர், ஆட்டோமெட்டிக் தட்பவெப்ப கட்டுப்பாட்டு வசதி, 10.25 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பகுதியாக டிஜிட்டல் வடிவில் இருக்கும் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்லீக்கான LED முகப்பு விளக்குகள், அதற்கு மேலே மெல்லிய கோடு போல LED DRLகள், பாடியின் நிறத்திலேயே குளோஸ்டு ஆஃப் கிரில் மற்றும் பம்பர் ஆகிய அம்சங்களுடன் டிசைனை டாடா மேம்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த காரில் மல்டிபிள் 2டி, 3டி வியூ, 360 டிகிரி SVS கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வித் ட்ராக்ஷன், 6 ஏர்பேக்குகள், EBD-யுடன் கூடிய ABS, ப்ளைண்ட் வியூ மானிட்டர், ஹில்ஹோல்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது.

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

3 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

3 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

3 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago