சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.9 முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. பரிசுத்தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் தருவர்
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More