அமெரிக்க அதிபர் தேர்தலில் 284 தேர்தல் அவை வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பிடன்.
கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பிடன் வெற்றி பெற்றுள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் அறிவித்து வருகின்றன.
ஜோ பிடன் 264 தேர்தல் அவை வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பென்சில்வேனியாவில் 20 தேர்தல் அவை வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், 270 தேர்தல் அவை வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில், 284 தேர்தல் அவை வாக்குகள் பெற்று பிடன் வெற்றி பெற்றுள்ளார்.Dailyhunt