Social Activity

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?-TamilNadu Govt. to provide free sewing machine

சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் தையல் இயந்திரத்தைப் பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து  சமூகநலத் துறை மூலம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதைப் பெற மாத வருமானம் ரூ. 12,000-க்குள் இருக்க வேண்டும். இருப்பிடம், தையல் பயிற்சி, வயது, சாதிச் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் என்பதற்கான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


ஆவணங்கள்

1, வயதுச் சான்றிதழ்
2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3, வருமானச் சான்றிதழ்
4, ஆதார் அட்டை
5, அனுபவ சான்று
6, மொபைல் எண்
7, சொந்த கையொப்பம்
8, சாதி சான்றிதழ்
9, இருப்பிடச் சான்றிதழ்
10 உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
11,கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்

தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், முகவரி தமிழ்நாட்டில் இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும் (இந்த சான்றிதழை உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் பெறலாம்) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

Image result for இலவச தையல் இயந்திரம்


 மகளிர்சுய உதவிக் குழுக்களின் மூலம் பயிற்சி பெற்று பெறப்பட்ட சான்றிதழ்களையும் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்

Downlode link

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள
1. சமூக நலத்துறை
2. சமூகநலத்துறை வளாகம் (உங்கள் மாவட்டத்தின் பெயர்)
என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம்.

Application Form

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top