மூத்த குடிமகன்கள், தட்கல் சலுகைகள் ரத்து
சிறப்பு ரயிலில்.. சிறப்பு சலுகை எதுவும் இல்லை.
முன்பதிவு இணையதளம் முடங்கியது.
ரயிலில் பயணிக்க ஸ்மார்ட் போன் அவசியம்
கொரோனா வைரஸ் பரவுவதால் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டன. குறிப்பாக, பேருந்து, ரயில் ஆகிய பொது போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சமயத்தில், முன்பு போல் இல்லாமல் நிறைய விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு ரயில்கள் இயங்கும், என ரயில்வே துறை அறிவித்தது.
அதன்படி ரயில்கள் அனைத்தும் டெல்லியை மையமாக வைத்து மற்ற, இடங்களுக்கு செல்லும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மடகான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய ரயில் நிலையங்களுக்கு, இடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்தது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த சிறப்பு ரயில்களில் ஏசி வகுப்புகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான சாமானியர்கள் செல்லும், ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட வகுப்பு, இந்த ரயில்களில் இடம்பெறவில்லை. இதற்கிடையே இந்த சிறப்பு ரயில்களில் சாமானியர்கள் செல்லமுடியாத அளவுக்கு, டிக்கெட்டின் விலை அதிகமாக இருப்பதாக, பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டெல்லி – சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் 2430 ரூபாயாகவும், அதிகபட்சமாக 5995 ரூபாயாகவும் (வகுப்புகளின் அடிப்படையில்) உள்ளது.
குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு 5995 ரூபாய்
குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு 3500 ரூபாய்
குளிர்சாதன வசதி கொண்ட மூன்றாம் வகுப்பு 2430 ரூபாய்
சிறப்பு ரயில்களில் குளிர்சாதன வசதி மட்டுமே இருப்பதால், ராஜதனி அதிவேக ரயிலில் உள்ள கட்டணம் அமல்படுத்தப்படும், என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சென்னை – டெல்லி இடையே சாதாரண படுக்கை வசதிகொண்ட ரயில் கட்டணம் 820 ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அந்த மாதிரியான பெட்டிகள் இல்லாமல், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருப்பதால், சாமானியர்கள் பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மூத்த குடிமகன்கள், தட்கல் சலுகைகள் ரத்து
சிறப்பு ரயிலில்.. சிறப்பு சலுகை எதுவும் இல்லை.
முன்பதிவு இணையதளம் முடங்கியது.
ரயிலில் பயணிக்க ஸ்மார்ட் போன் அவசியம்
இந்திய ரயில்வே புதிய கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்
By
Posted on