கட்டுமானம்- ஆட்டோ தொழிலாளர்கள்ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்அதிகாரி தகவல்
கட்டுமானம்- ஆட்டோ தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் கூறி உள்ளார்.
திருவாரூர்,
கட்டுமானம்- ஆட்டோ தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு பொருட்கள் தொகுப்பு
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு நிவாரணமாக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்துள்ள கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் அந்த 2 நலவாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற 6,551 கட்டுமான தொழிலாளர்கள், 1,507 ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் 519 கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியதாரர்கள், 53 ஆட்டோ தொழிலாளர் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய உணவு பொருட்கள் தொகுப்பை அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு அட்டை
நலவாரிய பதிவு அட்டை, ஸ்மார்ட் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வந்து ரேஷன் கடைகளில் பணியாளர்களிடம் காண்பித்து உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.