கல்லூரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து 13-ந்தேதி பிறகு தெரிய வரும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருக்கிறது.
பருவத்தேர்வு செமஸ்டர் எக்ஸாம்:
நாடு முழுவதும் கொறடா வால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது இதனால் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 14-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கின்றன இந்த காலகட்டங்களில் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு ஆன்லைனில் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கியது.
அதன்படி சென்னை பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது அதில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறனை ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்கவும் செமஸ்டர் தேர்வு மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும் பாடமெடுக்கும் பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இருப்பதாக பேசப்படுகிறது அதிலும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மே 15ம் தேதி வரை மூடப்பட்டு இருக்க வேண்டுமென்று பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? 2020 – 21ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக மாணவர் மாணவிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறது.
இந்தக் குழு ஆலோசித்து பருவத்தேர்வு மற்றும் 2020 – 21 கல்வி ஆண்டு வகுப்புகள் குறித்து சில முடிவுகளை எடுத்து அதனை ஒரு அறிக்கையாக 13ம் தேதி சமர்ப்பிக்க இருக்கிறது அதனை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழக மானியக்குழு 13-ஆம் தேதிக்கு பிறகு சில முக்கிய முடிவுகளை அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலைகழக தேர்வு தள்ளிவைப்பு
அண்ணா பல்கலைக் கழகத்தால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட இருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் கோரா ஊரடங்கு உத்தரவால் மாற்றியமைக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்படவுள்ளது ஊரடங்கு முடிந்த பிறகே தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது