தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், இன்று 5-வது நாளாக இன்று காலை 11 மணிக்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு…
* டிஜிட்டல் முறையில் கல்வி கற்க, பிஎம் இ-வித்யா திட்டம் அறிமுகம்.
* செவி மற்றுத் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்காக சிறப்பு பாடத்திட்டம்.
* நாடு முழுவதும் மேலும் 12 கல்விக்தொலைக்காட்சிகளை தொடங்க திட்டம்.
* ஆன்லைன் மூலம் பள்ளிக்கல்வியை மேம்படுத்த, புதிதாக கல்வி சேனல்கள் தொடங்கப்படும்.
* 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனியே சேனல் தொடங்கப்படும்.
* ஒவ்வொரு வகுப்புக்கும் கல்வி கற்பிக்க தனியாக ஒரு சேனல் தொடங்கப்படும்.
* சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்படும்.
* சிறந்த கல்வி நிறுவனங்கள் கொண்டு மே 30- முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
* டிடிஎச்சில் மாணவர்களுக்கு கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப டாடா ஸ்கை, ஏர்டெல உடன் ஒப்பந்தம்.
* 2025-க்குள் அனைத்து குழந்தைகளும் 5-ம் வகுப்பு வரை படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம்
* மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.
* கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 இ-புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆன்லைன் கல்வியில் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வாய்ப்பு ஏற்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றார்.