சென்னை : மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ள
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 2) 2013 – 2018 பதவிக்கான நேர்முக தேர்வு கொரோனா தொற்று காரணமாகத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.மேற்கூறிய பதவிக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை (ஜூலை 21 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
மேற்கூறிய நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளத் தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் தேதி மற்றும் நேரம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.