Sivakarthikeyan Ayalaan
அயலான்
அயலான் படம் பல பிரச்சனைகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படமான அயலானை ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார். முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவை கொடுத்தனர்.
ஆனாலும் கூட எதிர்பார்த்த வசூல் பல இடங்களில் அயலான் படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் கேரளாவில் அயலான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. இதை தொடர்ந்து மற்றொரு முக்கிய இடத்திலும் இப்படம் தோல்வியடைந்துள்ளது.
தோல்வியை தழுவிய அயலான்
ஆம், வெளிநாட்டில் அயலான் படத்தின் இதுவரை வசூல் ரூ. 18 கோடி மட்டுமே. இப்படத்தை ரூ. 10 கோடி கொடுத்த வெளிநாட்டு உரிமை வாங்கியுள்ளனர். இதில் இதுவரை ரூ. 10 கோடிக்கும் கீழ் தான் ஷேர் கிடைத்துள்ளது.
இதனால் வெளிநாட்டிலும் அயலான் திரைப்படம் தோல்வி என தகவல் வெளியாகியுள்ளது. இப்படியொரு நிலைமை இருக்க அயலான் 2 குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.