சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) திட்டம் பற்றி தெரியுமா? இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? இந்த திட்டத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன?
ஒருவேளை, சந்தாதாரர் எதிர்பாராமல் இறந்துவிட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்.. 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்
வங்கிக்கணக்கு: அடல் பென்ஷன் திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்கலாம்.. இதற்கு வங்கிக்கணக்கு, ஆதார் கார்டு போன்றவை உங்களிடம் ஆவணங்களாக கேட்கப்படும்..
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன தெரியுமா? இதில், ஓய்வூதிய தொகையாக மாதந்தோறும் சந்தாதாரருக்கு ரூ. 1,000 முதல் 5,000 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என்றும் பென்ஷன் கிடைக்கும் திட்டங்களும் உள்ளன. அதேபோல, அதிக தொகையை செலுத்தி, பென்ஷன் தொகையை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
ஸ்பெஷாலிட்டி: வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகனும், இந்த திட்டத்தின் பலனை பெற முடியும். இன்னும் சொல்லப்போனால், வரி செலுத்தும் பிரிவின் கீழ் இல்லாத நபர்களுக்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. தனியார் நிறுவன ஊழியர்களும் ஓய்வூதியம் பெறலாம்.
ஓய்வு காலத்தில் கணவன், மனைவி இருவருமே பயன்பெற கூடிய வகையில் ரூ.10,000 மாத வருமானத்தை வழங்கக்கூடிய திட்டமாக உள்ளதால்தான், இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர், இந்த திட்டத்தின் பலனை பெற்றுள்ளனர்.
அடல் பென்ஷன் யோஜனா அக்கவுண்ட் திறப்பது எப்படி?
உங்களுடைய வங்கி கிளையை அணுகுவதன் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் அக்கவுண்டில் லாகின் செய்வது மூலமாகவோ APY திட்டத்தில் விண்ணப்பிக்க, பதிவு படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, ஆதார், மொபைல் நம்பர் போன்ற அடிப்படை விவரங்களை நிரப்பி கொள்ள வேண்டும். உங்களின் பொருளாதார இலக்குகள் மற்றும் வயதின் அடிப்படையில் இந்த பென்ஷன் தொகையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
படிவத்தை சமர்ப்பித்து பங்களிப்புகள் ஆட்டோ டெபிட் ஆவதை உறுதி செய்ய, அதனை உங்களுடைய சேமிப்பு கணக்கு வங்கியில் இணைக்க வேண்டும்.. பின்னர், வங்கியிலிருந்து உங்களுக்கு APY அக்கவுண்ட் நம்பர் ஒன்று வழங்கப்படும்.. இப்போது பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு உங்களுடைய விண்ணப்பம் உறுதி செய்யப்பட்டதற்கான மெசேஜ் உங்களுக்கு கிடைத்துவிடும்.
அடல் பென்ஷன் திட்டத்தை ஒருவர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்க முடியும். வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் ஒரு கிளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அடல் பென்சன் திட்டக் கணக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.