பெண்களுக்கு ரூ 50,000 வழங்கும் புதிய திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பெற தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அடுத்தகட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டத்திற்கு இடையே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.
உலகம்
வர்த்தகம்
ஜோதிடம்
மீம்ஸ்
டெலிவிஷன
ரெடியா இருங்க.. பெண்களுக்கு தமிழக அரசு தரும் ரூ.50000.. யார் எல்லாம் பெற முடியும்? எப்படி பெறுவது?
By Shyamsundar I
Updated: Thursday, January 23, 2025, 8:30 [IST]
சென்னை: பெண்களுக்கு ரூ 50,000 வழங்கும் புதிய திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பெற தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அடுத்தகட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
Advertisement
ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டத்திற்கு இடையே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விண்ணப்பங்கள்:
இந்த திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பதிவு செய்த உறுப்பினர்களுக்கு சுயத்தொழில் செய்ய ரூ. 50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்காக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தே மாணவர்களுக்கு நேரடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் 2 பெண்கள் குழந்தைகள் திட்டத்திற்கான ஆவணங்கள் சரி பார்ப்பு பணிகள் நடக்க உள்ளன.
திட்டம் 1: அதன்படி முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிதியுதவி நிவாரண பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளநிலை மேற்கொள்ள பொறியியல் ஊக்குவிக்க பணம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் பட்டப்படிப்புகளை தொடர்ந்து பயில்வதற்கும் ஏதுவாகவும் அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-24- கல்வியாண்டில் 24 மாணாக்கர்களுக்கு நிதி உதவித் தொகையான ரூ.50,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்கும் பயிலும் அனைத்து கல்விக் கட்டணத்தை 2007-08-ஆம் கல்வியாண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அரசால் தள்ளுபடி செய்து அரசு கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது.
கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.
பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
பெண்களுக்கு 50 ஆயிரம் உதவி தொகை.! புதிய திட்டம் அறிமுகம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? வழிமுறை என்ன.?
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்
ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பேருக்கு ரூ.50,000 மானியம்: விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு